நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வரவு செலவு திட்டத்தில் மலையகத் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக 500 மில்லியன் ரூபாய ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு லட்சம் வீடுகள் தேவைப்படுகின்றது. அவ்வாறு பார்த்தால் ஒரு வீட்டிற்கு 5,000 ரூபாய் மட்டுமே வழங்க முடியும்.
ஆனால் இந்தப் பணமானது தற்போது வசிக்கும் வீட்டின் கழிப்பறையை சீரமைக்க கூட போதாது. அரசாங்கம் தமிழ் மக்களை வஞ்சிக்கிறது.
இந்த அரசாங்கம் எப்பொழுதும் தமிழ் மக்களை தான் ஏமாற்றியது. தற்போது மீண்டும் ஏழை தோட்ட மக்களை ஏமாற்ற முயல்கிறது. உடலாலும் உள்ளத்தாலும் அவதியுறும் தமிழ் மக்களே என்றும் கடினமான வேலையை செய்கிறார்கள். அதன் வலிகளை புரிந்து கொள்வது கடினம். ஏனெனில் சிங்கள மக்கள் கடின வேலைகளை செய்ய விரும்புவது இல்லை.
இருந்தும் பாவப்பட்ட தமிழ் மக்களுக்கு சலுகை இல்லை. இதுதான் நம் நிலை.என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.