மன்னார் - சௌத்பார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று (20) சனிக்கிழமை காலை மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த மர்ம பொருள் தொடர்பாக அப்பகுதி கடற்படையினர் மன்னார் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் உடனடியாக அப்பகுதிக்கு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வருகை தந்தனர்.
குறித்த மர்ம பொருளானது பல்வேறு மின் சுற்றுக்களுடன் காணப்பட்ட நிலையில் அதிரடிப்படையினர் குறித்த மர்மப் பொதியை மீட்டு சோதனை செய்தனர்.
எனினும் குறித்த மர்மப் பொதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எவ்வித பொருட்களும் இல்லை என தெரிய வந்துள்ளதுடன் குறித்த மர்ம பொருள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.