நேற்று நடைபெற்ற குறிஞ்சாங்கேணி அனர்த்தத்தினால் தமிழ் இஸ்லாமிய பச்சிளம் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் ரௌன்டபோட் இல்லாத பிரதேசம் கிண்ணியா பிரதேசம் தான்.
இதேபோல் நேற்றைய தினம் பாடசாலை மாணவியை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளை இலக்க தகடு இல்லாத இராணுவ பேருந்து மோதியதில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் கொக்குவில் பாடசாலையில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவி குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மோட்டர் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவியின் தந்தை கால் முடிவடைந்து தலையில் பலத்த அடியுடன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் உள்ளார்.
இது போன்று இந்த மாதம் மட்டும் ஏராளமான வீதி விபத்துக்கள் இடம் பெறுகின்றன. இதற்கு அரசாங்கம் ஒரு சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
இந்த விபத்துகள் குறித்து இன்று கூடிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களுக்கு பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.