யாழ்ப்பாணம் கொடிகாமம் மண்டுவில் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் நேற்று (23) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டுவில் வடக்கு ஜே.346 கிராமத்தில் நேற்று மாலை துப்புரவு பணியின் போது நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரல் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் ஆயுதங்கள் இருப்பதைக் கண்டு காணி உரிமையாளர் கொடிகாமம் பொலிஸாருக்கும் 52வது பிரிவு இராணுவ முகாமிற்கும் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.