ஒரே நாடு ஒரே சட்டம் என்கிறீர்கள். இருப்பினும் மாகாணசபைகளில் 9 சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றது. போர்த்துக்கேய சட்டம், ஒல்லாந்து சட்டம் என அனைத்து சட்டங்களையும் நாம் பின்பற்றுகின்றோம். கேட்டால் நாம் சுகந்திரம் அடைந்து விட்டோம் என்கின்றோம். இந்த மாகாணசபை இல்லாமலாக்கி ஒரு சரியான அரசியலமைப்பை உருவாக்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.