கிண்ணியாவில் இழுவை படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகிய அனர்த்தத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் மைத்துனரான கிண்ணியா மேயரே பொறுப்பு என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இன்று தெரிவித்துள்ளார்.
அவரை பதவியில் இருந்து நீக்குமாறும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் லன்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தடாகத்தில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை எனவும் அனுமதியின்றி இவ்வாறான படகு சேவையை நடாத்துவதால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி படகு சேவை நடத்தப்பட்டதாகவும், மேயரின் நடவடிக்கையால் பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.