கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 1.3 கிலோகிராம் குஷ் கஞ்சா அடங்கிய பத்துப் பொதிகளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 20 மில்லியன் இருக்கும் என கூறப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் பல பொட்டலங்களை பரிசோதித்த போது சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இந்த இடைமறிப்பு செய்யப்பட்டது.
குறித்த பொதிகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து ராகம, பிலியந்தலை, கொழும்பு, கண்டி மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.