web log free
January 12, 2025

கேக் படம் அனுப்பியதற்காக தமிழ் தாதியை தாக்கிய கடற்படை தாதி

நேற்று யாழில் தனது கைத்தொலைபேசி இலக்கத்துக்கு கேக் படத்தை அனுப்பிய தமிழ் தாதிய மாணவர் ஒருவரை கடற்படை தாதிய மாணவன் சரமாரியாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,தாதிய பயிற்சிக் கல்லூரியிலேயே பயிற்சி பெறும் கடற்படை மாணவர் ஒருவர், லண்டனில் தமிழர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சமிக்ஞை காட்டிய இராணுவ அதிகாரியின் படத்தை கடந்த மே 19ஆம் திகதி அனுப்பியுள்ளார்.

அவரின் இந்த செயல் தமிழ் மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், நேற்றைய தினம் பிறந்தநாள் கேக் வெட்டும் படம் ஒன்றை தமிழ் மாணவர் ஒருவர் குறித்த கடற்படை மாணவனின் கைபேசி இலக்கத்துக்கு அனுப்பியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கடற்படை மாணவன் படம் அனுப்பிய தமிழ் மாணவனை கடுமையாக தாக்கியுள்ள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவித்த போதும் நடவடிக்கை எடுப்பதற்கு கல்லூரி மறுப்புத் தெரிவித்துவிட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Saturday, 27 November 2021 09:15
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd