தல்பிட்டிய தளுவ நிர்மலாபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் எரிவாயு சிலிண்டரில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தையில் இருந்து எரிவாயு மாதிரிகளை எடுத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விஷவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு உடனடியாக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறமதாச தெரிவித்துள்ளார்.