போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் 218 பேரின் தகவல்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் பதிவு செய்யப்பட்ட 75 வழக்குகளில் இந்த நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப்பொருள் விற்பனை மூலம் சேகரிக்கப்பட்ட பணம் நிலங்கள், வாகனங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் பிரிவு விசாரணைகளை தொடங்கியுள்ளது.