கண்டி - குருதெனிய வீதியில் இலுகமோதர என்ற இடத்தில் இன்று (28) காலை கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும், எனினும் வாகனத்துடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
காணாமல் போன நபரை தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.