web log free
May 21, 2024

கோவணத்துல காசு இருந்தா கோழிகூட பாட்டுப் பாடுமாம்

பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களே இக்கட்டுரை உங்களுக்காக எழுத ஆசைப்படுகின்றேன்.பணம் வந்தால் இத்தனை தீய குணங்கள் வந்து விடுமா? 

இதைத்தான் பணம் பத்தும் செய்யும்

என்று சொன்னார்களா?

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!..உண்மையாக இருந்தால் Share pannuga

 

அந்தப் பத்து குணங்களாவன:-

        

⭐பேராசை

⭐தீய இச்சை (தேவையில்லா ஆசைகள்)

⭐கஞ்சத்தனம்

⭐காதல்

⭐அகம்பாவம் அதாவது ஈகோ

⭐பொறாமை 

⭐ஆடம்பரம்

⭐அகங்காரம்(தனக்கு நிகர் எவரும்

இல்லை என்ற மேட்டிமை)

⭐கர்வம் ( தற்பெருமை)

⭐கெடுமனம் (அதாவது பிறருக்கு

 கேடு விளைவித்து இன்பம் காணும்

 கொடிய எண்ணம் )  

 

 போன்ற பத்து தீய குணங்களும்

 வந்து சேர்ந்து விடுமாம்.பணம் வந்தால் இத்தனை தீய குணங்கள்

வந்து விடுமா? இதைத்தான் பணம் பத்தும் செய்யும் என்று சொன்னார்களா?

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!"பணம் பத்தும் செய்யும்" என்பது நமது முன்னோர்களின் கணிப்பு.பெரியவர்கள் சொன்னால் உண்மை இல்லாமலா இருக்கும்?

 

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே"

என்பார்கள்.

"இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய் வேண்டா செல்லாது அவன் வாயிற் சொல்"

பணம் இல்லை என்றால் கட்டிய மனைவி மதிக்க மாட்டாள்.

பெற்ற தாய்கூட விரும்ப மாட்டாளாம். அவனுடைய பேச்சு சபையில் எடுபடாது. இதுதான் உலக எதார்த்தநிலை."பணமில்லாதவன் பிணம்"பணமில்லாதவன் செயலிழந்தவன் ஆகிவிடுவானாம். உண்மைதாங்க...பணம் இல்லாமல் என்ன நடந்துவிடப் போகிறது.

"பணம் உள்ளவன் பின்னாலும் பத்து பேர் 

பதவி உள்ளவன் பின்னாலும் பத்து பேர்"

பணம் இருந்தால்தான் நாலுபேர் வந்து

நம்மை எட்டிப் பார்ப்பார்கள்.

பணம் இல்லையா இறுதி யாத்திரையின் போது

தூக்கிச் செல்லகூட நாலுபேர்

இருக்கமாட்டார்கள்.

 

இவ்வுலகில் இப்போதைய தேவை ‘செல்வம் சேர்ப்பது’ மட்டுமல்ல, ‘நல்வாழ்வு’ம் தான். செல்வம் என்பது நல்வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கான பல கருவிகளில் ஒன்று. அதை வைத்து, வெளிசூழ்நிலைகளைத் தான் நாம் இனிமையாய் அமைத்துக் கொள்ள முடியுமே தவிர்த்து, அதுவே எல்லாம் அல்ல. ஆனால் இன்று, அதையே மதம் போல் பலரும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் என்பது நல்வாழ்விற்கான ஒரு வழி மட்டுமே. பணம் மட்டுமே நல்வாழ்வு அல்ல. தேவையே இன்றி அதற்கு முக்கிய இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ‘செல்வம் நல்லதா? கெட்டதா?’... செல்வம் என்பது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. அது நாம் உருவாக்கிக் கொண்ட ஒரு சாதனம். அவ்வளவு தான்.

இங்கு யாருமே செல்வத்திற்கு ஆசைப் படவில்லை. இது நம்பமுடியாததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் விரும்புவது பணத்தை அல்ல. அவர்கள் விரும்புவது நல்வாழ்வைத்தான். அதை அடைவதற்கான ஒரு கருவியாக பணம் இருக்கிறது, அவ்வளவுதான்.

இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

 

இங்கு யாருமே செல்வத்திற்கு ஆசைப் படவில்லை. இது நம்பமுடியாததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் விரும்புவது பணத்தை அல்ல. அவர்கள் விரும்புவது நல்வாழ்வைத்தான். அதை அடைவதற்கான ஒரு கருவியாக பணம் இருக்கிறது, அவ்வளவுதான்.

எல்லோருக்குமே அவர்கள் வாழ்க்கை இனிமையாய் அமைய வேண்டும் என்பது தான் ஆசை. இந்த இனிமை என்பது ஐந்து வழிகளில் நடக்கலாம். உங்கள் உடல் இனிமையாய் இருந்தால், அதை சுகம் என்போம். உங்கள் மனம் இனிமையாய் இருந்தால், அதை அமைதி என்போம். இதுவே மனம் மிக இனிமையாய் இருந்தால், அதை மகிழ்ச்சி என்போம். உங்கள் உணர்வுகள் இனிமையாய் இருந்தால், அது அன்பு. அதுவே மிகவும் இனிமையாய் இருந்தால், அது கருணை. உங்கள் உயிர்சக்தி இனிமையாய் இருந்தால், அது பேரானந்தம். அதுவே மிகவும் இனிமையாய் இருந்தால், அது பரவசம். உங்கள் சூழ்நிலைகள் இனிமையாய் இருந்தால், அது வெற்றி. உங்களுக்கு இவ்வளவு தானே வேண்டும்?

 

‘இல்லை. இல்லை. எனக்கு சொர்க்கத்திற்குப் போகவேண்டும்’. உங்களுக்கு ஏன் சொர்க்கத்திற்குப் போகவேண்டும்? ஏனெனில் இதுவரை நீங்கள் கேட்ட கதைகள் எல்லாமே சொர்க்கத்தை மிக இனிமையான இடமாக வர்ணித்திருக்கின்றன. ஆக எல்லா நேரத்திலும் நீங்கள் விரும்புவது இனிமைதான். இந்த உலகத்தில் இருக்கும்வரை அந்த இனிமையை பணம் கொண்டு வாங்கிவிடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். இது ஓரளவிற்கு மட்டுமே நிஜம்.

 

ஆனால் பணம் கொண்டு நீங்கள் வெளி சூழ்நிலையில் மட்டுமே இனிமையை உருவாக்கிக் கொள்ளமுடியும், உள்சூழ்நிலையில் அல்ல. உங்களிடம் நிறைய பணம் இருந்தால், நீங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கலாம். ஆனால் உங்கள் உடல், மனம், உணர்வுகள், சக்திநிலை இனிமையாய் இல்லையென்றால், அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்கமுடியுமா? முடியாது. ஆனால் அதுவே, இந்த நான்கும் இனிமையாய் இருந்தால், மரத்தடி நிழலில் கூட நீங்கள் ஆனந்தமாக இருக்க முடியும்.

 

‘அப்படியென்றால், நான் பணம் வைத்துக்கொள்ளக் கூடாதா?’ அப்படிச் சொல்லவில்லை. ஆனால் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கும் இனிமையாய் இருந்து, உங்களிடம் பணமும் இருந்தால், உங்களின் வெளிசூழ்நிலையையும் நீங்கள் இனிமையாய் அமைத்துக் கொள்ளலாம். அதனால் பணத்தைப் பொறுத்தவரை, அது நல்லதோ, கெட்டதோ அல்ல. ஆனால் அது உங்கள் சட்டைப்பையில் இல்லாமல், உங்கள் தலைக்குள் போய்விட்டதென்றால், பின்பு அது துன்பத்தை வரவழைத்து விடும்.

பணத்தைப் பொறுத்தவரை, அது நல்லதோ, கெட்டதோ அல்ல. ஆனால் அது உங்கள் சட்டைப்பையில் இல்லாமல், உங்கள் தலைக்குள் போய்விட்டதென்றால், பின்பு அது துன்பத்தை வரவழைத்து விடும்.

 

"ஈட்டி எட்டும்வரைதான் பாயும்; 

பணம் பாதாளம் வரை பாயும்."

பணம் இருந்தால் எங்கிருந்தாலும்

இங்கு உள்ளவர்களைக் கைக்குள்

கொண்டு வந்துவிடலாம்.உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லமை பணத்திற்கு உண்டு."கோவணத்துல காசு இருந்தா கோழிகூட பாட்டுப் பாடுமாம் "கோவணம் கட்டி வந்தால் என்ன...பட்டு பரிவட்டங்கட்டி வந்தால் என்ன..பணம் இருந்தால் பின்பாட்டுப்பாட ஒரு கூட்டம் கூடவே வரும்.புகழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

"நாய் வித்த காசு குரைக்கவா செய்யும் ? 

கருவாடு விற்றகாசு நாறவா செய்யும்? "

எந்த வழியில் வந்தா என்னங்க...

பணம்...பணம்தாங்க..."ஒன்று ஜனக்கட்டு வேண்டும் - இல்லை என்றால்

பணக்கட்டு வேணும் "

 

இன்று பணத்தைக் கடவுளாக மாற்றிவிட்டு, அதைத் தேடி ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறோம். செல்வத்தை ஈட்டும் முயற்சியில் நம் வாழ்வின் ஆதாரமான இந்த பூமியையே அழித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒரு ஊசியைச் செய்தாலும், கம்ப்யூட்டர், கார், அல்லது வேறு எந்த பெரிய எந்திரத்தைச் செய்தாலும், அதற்கு இந்த பூமியைத் தான் தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பூமியை எந்த அளவிற்குத் தோண்டலாம், எந்த அளவிற்குத் தோண்டினால் இந்த பூமி தாங்கும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த அளவிற்குத் தெளிவு இல்லையென்றால், செல்வம் சேர்க்கும் நம் முயற்சியில், இப்பூமியை நாம் முழுவதுமாக அழித்துவிடுவோம். பலவகைகளில் நாம் இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.

 

இது ரொம்ப ரொம்ப உண்மைங்க...

இந்த இரண்டும் இருந்தால்தான்

சமுதாயத்தில் மதிப்பும்

மரியாதையும் கிடைக்கும்.

இப்படி பணமொழிகள் ஏராளம் உண்டு.

இந்த பழமொழிகள் வெறுமனே பணத்தின்மீது வெறுப்புள்ளவர்களால் சொல்லப்பட்டவைகளாக இருக்கும் என்று சொல்லிவிட்டு கடந்து போக

முடியாது.அனுபவித்து உணர்ந்த உண்மைகள்தான் பழமொழிகளாக நம்மோடு உலா வருகின்றன.

ஆளாளாளுக்கு பணத்தைப் பற்றிய

கருத்து மாறுபடலாம்.ஆனால் பணமில்லாமல் எதுவும் நடக்காது

என்ற கள நிலவரத்தை யாரும் மறுக்க முடியாது.மறைக்கவும் முடியாது.

பேச்சுக்கு வேண்டுமானால் பணம்

என்னங்க பணம். குணம்தானே நிரந்தரம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

 

காசு இன்றைக்கு ஒருத்தன் கையில்

இருக்கும். நாளை இன்னொருத்தன்

கையில் இருக்கும். பணம் நிரந்தரமல்ல...என்று ஏதேதோ வாய்க்கு வந்ததைப் பேசிக் கொள்ளலாம்.

உறவுகளை நிரந்தரமாக உங்களோடு

ஒட்ட வைப்பதற்கு முழுமுதற் காரணியாக இருப்பதே பணம் தாங்க...

சபையில் முன் வரிசையில் துண்டு போட்டு இடம் பிடித்து வைப்பதும் பணம் தாங்க...இதை யாராலும் மறுக்க முடியாது."காசேதான் கடவுளடா- அந்தக்

கடவுளுக்கும் இது தெரியுமடா"

சும்மாவா பாடி வைத்தார்கள்.

 

"தட்சணை இன்றி அர்ச்சனை இல்லை."

சாமியைப் பார்க்கவும் பணம் வேண்டும்.

"முட்டாப்பயலை எல்லாம் 

தாண்டவக்கோனே- காசு

முதலாளியாக்குதடா 

தாண்டவக்கோனே! 

கட்டியழும்போதும்

தாண்டவக்கோனே- பிணத்தைக்

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப் பெட்டிமீது கண்வையடா 

தாண்டவக்கோனே!"என்ற பராசக்தி படத்தில் உடுமலை நாராயணகவி எழுதிய பாடல் பணம் எவ்வளவு அவசியமான ஒன்று என்று நம்மை சிந்திக்க வைக்கிறது.இப்படி பணமே எல்லாம் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென பாதை மாறி எதிர்த்திசை நோக்கி திருப்பியடிக்க ஆரம்பித்தனர்.

பணம் எதிர்மறை தாக்கத்தையும்

உண்டுபண்ண வல்லது 

என்பதையும் நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

 

காசுக்கு நாணயம் என்ற பெயர் உண்டு.

நாணயம் உருண்டோடுவதுபோல

பணம் கைமாறிப் போகும் 

என்பதால்தான் அதற்கு நாணயம்

என்ற பெயர் வந்ததோ?நாணயத்திற்கு மற்றுமொரு பொருளும் உண்டு.

அதுதான் நேர்மை.பணம் அதிகமானால் 

அந்த நேர்மை இல்லாமல்

போக நிறைய வாய்ப்பு ஏற்பட்டுவிடுமாம்.பணம் பேசும்போது மனிதப் பண்பு காணாமல் போவது இயல்புதானே!

 

முதலில் ‘செல்வம்’ என்பது நம்மைப் பொறுத்தவரை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். செல்வம் என்றால் நிறைய வீடுகள், நிறைய கார்கள், நிறைய எந்திரங்கள், என இன்னும் நிறைய நிறைய, அப்படித்தானே? இப்படி நிறைய, நிறைய, நிறைய என்று போனால் அங்கு மரணம் தான் காத்திருக்கிறது. உலகின் மிக செல்வச் செழிப்பான நாடுகளில், உதாரணத்திற்கு அமெரிக்காவில், 20% மக்கள் மனோதத்துவ சிகிச்சை மேற்கொண்டு, அதற்கான மருந்தினை தொடர்ந்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த மருந்து மட்டும் கிடைக்காமல் போனால், அந்நாட்டின் 20% மக்களுக்கு பித்துப்பிடித்து விடும். இதை நல்வாழ்க்கை என்று சொல்லமுடியாது. பொதுவாக, பலர் கனவுகாணும் வசதிகள் அனைத்துமே ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனிடம் இருக்கிறது. அங்கு தேவையான செல்வம் இருக்கிறது, ஆனால் நல்வாழ்வு இல்லை. வாழ்க்கையே நன்றாக இல்லையென்றால், இந்த செல்வத்தை எல்லாம் வைத்து என்ன செய்வது? செல்வம் சேர்ப்பதை விடுத்து, மனித நல்வாழ்வை உருவாக்குவது பற்றி நாம் சிந்தித்தால், பின்பு என்ன தேவை, எந்த அளவிற்குத் தேவை, என்பதறிந்து நாம் செயல்படுவோம்.

 

கட்டுரை: மலையக மைந்தன் - சிவா

Last modified on Sunday, 28 November 2021 10:19