சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இரத்து செய்யப்பட்ட பல புகையிரத சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் மலையக புகையிரதபாதையில் பொடி மெனிகே புகையிரதம் மாத்திரம் இன்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 5.55 மணிக்கு பொடி மெனிகே புகையிரதம் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்துள்ளதுடன் மற்றுமொரு புகையிரதம் இன்று காலை 8.30 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.