நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அமைச்சராக செயற்பட்ட காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமான முறையில் சொத்து சேகரித்தத குற்றச்சாட்டில், இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்ல் செய்யப்பட்டது.
இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கினை ஜூலை மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2009 ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 2014 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வருமானத்திற்கு மேலதிகமாக 75 இலட்சம் ரூபாய் நிதி மற்றும் சொத்துகளை வைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பின் விமல் வீரவன்ச மீது இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.