web log free
May 23, 2026

50 ரூபாய் கொடுப்பனவுக்கு அனுமதி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாளாந்த கொடுப்பனவை 750 ரூபா வரையில் அதிகரிப்பதற்கு ஊழிய தொழிற்சங்கம் மற்றும் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்கிடையில் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், தோட்டத்தொழிலாளர்களுக்காக நிவாரணம் வழங்கும் வகையில் நாளாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக மேலும் 50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

50 ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd