web log free
January 13, 2025

அரிசி பற்றாக்குறைக்கு தீர்வு! மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி!

சந்தையில் அரிசி விலையை சீராக பேணுவதற்கு மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர்களுக்கு, வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் ஒரு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 30 November 2021 10:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd