இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறி ஒருவர் மத்தல பிரதேசத்தில் இருந்து திருடப்பட்ட 22 மாடுகளை பண்டாரவளையில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றுக்கு ஏற்றிச் சென்ற போது லுணுகம்வெஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அகிம்சை சம்மேளனம் 2020 ஆம் ஆண்டு வனவிலங்கு அமைப்பின் தலைவர் என்ற சான்றிதழை பிரதான சந்தேக நபருக்கு வழங்கியுள்ளதுடன், குறித்த சான்றிதழைப் பயன்படுத்தி சட்ட அனுமதியின்றி மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் அப் பகுதியில் உள்ள மந்தைகளிலிருந்து கால்நடைகளை வாங்கியதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளார்.
கால்நடைகளை விடுவித்தல் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வழங்கிய நன்றி கடிதத்தை காட்டி சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.