பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒரு கிலோ அரிசியில் 20 முதல் 30 ரூபாய் வரை இலாபம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது. சக்தி ரைஸ் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் முதித பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இவ்வளவு இலாபம் ஈட்டும்போது, பெரேரா தனது இலாபத்தை 5 ரூபாய்க்கு குறைந்துள்ளதாக கூறுகிறார்.
நாட்டில் அரிசி மாஃபியா ஒன்று இருப்பதாகவும், அது நிதி அமைச்சும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து உருவாக்கப்பட்டது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
லங்கா சதொச அரிசி விற்பனையினால் ஏற்பட்ட நட்டம் ரூ. 650 மில்லியன் என தெரிவித்தது தாம் அல்ல, அமைச்சர் பந்துல குணவர்தன தான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரிசி நெருக்கடிக்கு 50% அமைச்சர் பந்துல குணவர்தன பொறுப்பேற்க வேண்டும் என பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
பெரேரா மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் பந்துல குணவர்தனவின் நண்பரான உணவுத் திணைக்களத்தின் கணக்காளரால் 3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூடியூப் சேனலுடனான நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது சக்தி ரைஸ் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் முதித பெரேரா இதனைத் தெரிவித்தார்.