முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நவம்பர் 19ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டன.
பிரதிவாதி தரப்பு சாட்சி விசாரணையின்றி, பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு அசாத் சாலி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமையவே இன்று (02) அவர் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.