2003ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை வவுனியா மாவட்டத்தில் 29 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 16 பேர் ஆண்கள் எனவும் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட உத்தியோகத்தர் டாக்டர் கே.எஸ். திரு.சந்திரகுமார் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், வவுனியா மாவட்டத்தில் இந்த நாட்களில் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த விபச்சாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் ஏறக்குறைய 10 பாலியல் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பாதுகாப்புப் படையினர், இளைஞர் சமூகம், பாடசாலை மாணவர்கள் என அனைவருக்கும் எயிட்ஸ் அபாயம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக டாக்டர் கே.சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.