web log free
April 08, 2026

நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான்

மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்பின்னர், விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைத்தீவு நோக்கி செல்ல முற்பட்ட நிலையில், அது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய அவர் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd