ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நொச்சியாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
சந்தேகநபர் நேற்று முன்தினம் (04) ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற போது அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரி கணித ஆசிரியர் எனவும் அவர் பாரியளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுராதபுரம் நொச்சியாகம மற்றும் உலுக்குளம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் அனுராதபுரம் புனித நகரின் வெஸ்ஸகிரிய வயல்வெளிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் காரை சோதனையிட்ட போது, கறுப்புப் பையில் சுற்றப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சா, 279,000 ரூபாய் மற்றும் இரண்டு ஸ்மார்ட் போன்கள் உட்பட நான்கு போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரும் மதுவரி திணைக்களமும் தனது மோசடிக்கு உதவுவதாக பெருமையடித்துக் கொண்டே சந்தேக நபர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அரசாங்க வேலை பெற்று தருவதாக கூறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் 30 வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.