யாழ்ப்பாணம் மடகல் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் திங்கட்கிழமை (06) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் சுமார் 275 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது சம்பவத்துடன் தொடர்புடைய 02 சந்தேக நபர்களை கடற்படையினரால் கைது செய்ய முடிந்தது.
வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS ரணதீர இன்று காலை மடகல் கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றைக் கண்டுள்ளது. குறித்த டிங்கி படகு கடற்படையினரால் தேடப்படவிருந்த நிலையில், அது சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டது, அங்கு வடக்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட P 055 இன் கரையோர ரோந்துக் கப்பல், 02 சந்தேக நபர்களுடன் தப்பிச் செல்லும் முயற்சியில் டிங்கி படகை இடைமறித்துள்ளது.
கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக தேடுதலின் போது, கடலில் தத்தளித்த 110 கேரள கஞ்சா பொதிகள் அடங்கிய 07 மூடைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். ஈரமான எடையுடன் சுமார் 275 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா சரக்கு. மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ. 82 மில்லியன்.
குறித்த பகுதியில் கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக சந்தேகநபர்கள் கேரளா கஞ்சா அடங்கிய இந்த மூட்டைகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் வீசியிருக்கலாம் என நம்பப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
25 மற்றும் 37 வயதுடைய மடகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.