யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் வாள்வெட்டுத் தாக்குதலில் முடிவுக்கு வந்தது.
யாழ்ப்பாணம் நாவற்குழி புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (06) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.