கிளிநொச்சி பகுதியில் இளம்பெண்ணை டிப்பர் வாகனத்தில் கடத்தி சென்ற போது, குறித்த டிப்பர் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கடத்தப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டாவளை புதுப்பாலம் பகுதியில் டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார் எனவும், கடத்தப்பட்ட 23 வயதான பெண் உள்ளிட்ட இருவர் படுகா யமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.