டயகம அக்ரோயா ஆற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.
டயகம 5ஆம் பிரிவைச் சேர்ந்த சாமிநாதன் தங்கேஸ்வரி வயது 53 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து டயகம பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை மீட்டுள்ளனர்.
பெண் ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்தாரா அல்லது கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.