மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் அமைப்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் முகாமைத்துவத்தினால் அனைத்து துறைகளும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்த அவர், நாட்டு மக்கள் தற்போது மின்சாரத்தை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மின்சார பிரச்சினைக்கு அரசாங்கத்தால் தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை என்றும் மக்களின் குரலுக்கு செவிசாய்காது செயற்படும் அரசாங்கம் தேர்தலை நடத்துவதிலும் பின்வாங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.