2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகின.
கொழும்பு விசாகா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிலன்க திசிவாரி வருசவிதான அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய எந்தவித மாணவர்களும் இடம்பெறவில்லை.
கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்காக ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஐந்து லட்சத்து 18 ஆயிரத்து 184 பேர் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர்.
இதில் 71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் "ஏ" சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.