பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்து விநியோகித்த எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரான நாகஹனந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்களின் சமையல் எரிவாயு வெடிப்பினால் , உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இந்த மனுவில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபை, இலங்கை தர நிர்ணய பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திக சேனாரத்ன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் மேற்படி மனுவானது மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.