நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த கார் ஒன்று சென் கிளேயர் பகுதியில் வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்தபோது டிரைவர் மட்டுமே காரில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.