இலங்கை கடற்படை தனது 71வது ஆண்டு நிறைவை நேற்று (டிசம்பர் 09) கொண்டாடியது.
இதனையொட்டி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதல்களுடன் கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள், சமூக நலன்புரி செயற்பாடுகள் மற்றும் கடற்படை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட ஒரு அரிய வாய்ப்பினை வழங்கும் வகையில் நேற்றும் இன்றும் (டிசம்பர்.09&10) காலிமுகத்திடல் கடற்பிராந்தியத்தில் அவைகள் நங்கூரமிட்டு வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதான மற்றும் அமைதியான யுகத்தை தோற்றுவித்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கடற்படை முதற்தர பாதுகாப்பு வலயமாக செயற்பட்டது. மேலும் போர் நிறைவடைந்த பின்னர் தேசத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் கடற்படை ஒரு பன்முக பங்காற்றி வருகின்றது.
இலங்கை கடற்படை தொண்டர் படையானது 1937ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இலங்கையின் பிரித்தானிய தொண்டர் ஒதுக்குப் படையாக பிரித்தானிய கடற் படையினரின் கீழ் உள்வாங்கப்பட்டது. இலங்கை கடற்படை வரலாற்றின் திருப்புமுனையாக ஒரு புதிய அத்தியாயம் 1950 ம் ஆண்டு டிசம்பர், 09ம் திகதி பிரித்தானிய இலங்கை கடற்படை நிறுவப்பட்டது. முதலாம் குடியரசு யாப்பின் பிரகாரம் 22ம் திகதி மே மாதம் 1972ம் ஆண்டு பிரித்தானிய இலங்கை கடற்படையானது இலங்கை கடற்படை என பெயர் மாற்றம் பெற்றது.