யுகதனவி ஒப்பந்தம் திறைசேரியால் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்டதால் அதனை வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பகிரங்கப்படுத்தப்படாத இந்த ஒப்பந்தம் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில். பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க அமைச்சரவை தீர்மானித்ததாக பெர்னாண்டோ கூறினார்.
"ஒப்பந்தத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் நாங்கள் படிக்க வேண்டியதில்லை". என்று பெர்னாண்டோ கூறினார்.