ஆசியாவின் ஆச்சரியம் இதுவா என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனேமுல்லை பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினமன்று மதுபானம் விற்பனை செய்வதற்கு சுற்றுலா அமைச்சால் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. நல்லதுதானே! நத்தாருக்கு குடித்து குடித்து சாக வேண்டியது தான. இதுவா ஆசியாவின் ஆச்சரியம்?? இதுவா சுபீட்சத்தின் நோக்கு?? இவர்கள் நத்தார் பண்டிகையை இழிவு படுத்துகின்றார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.