web log free
April 06, 2026

மே தின கூட்டம் கம்பஹாவில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கம்பஹா நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற, மே தின ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த மேதின கூட்டத்தை நடத்துவது தொடர்பில் 7 குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தயாசிறி ஜயசேகர, மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Last modified on Saturday, 30 March 2019 02:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd