web log free
May 23, 2026

நாடு கடத்தப்பட்டவர்களை விசாரிக்க விஷேட குழு

மாகந்துர மதுஷ் உள்ளிட்டவர்களுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையிலான 7 பேர் அங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டீ.சீ.ஏ.தனபால, பொலிஸ் அதிகாரியு ருவன் குணசேகர, பொலிஸ் அதிகாரி நிஷாந்த சொய்சா, சீ.எஸ்.ஏ.கே.டி.யு. ஹேமந்த ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd