ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சிங்கப்பூரில் இருந்து அவசர அவசரமாக சிங்கப்பூருக்கு சென்ற மறுத்தினமான இன்று நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி இல்லாத நிலையில் கட்சியின் முன்னணி எம்.பி.க்களுடன் பேசிவிட்டு இன்று காலை நிதியமைச்சர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மேலும் ஜனாதிபதியின் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளும் கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரை பதவி நீக்கம் செய்யாவிடின் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ நெருங்கிய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி இன்று பல முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.