பொடி லேசி என்றழைக்கப்படும் ஜனித் மதுஷங்க என்ற குற்றவாளி இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொடி லேசியின் தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியானதை அடுத்து, அவர் மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஜனித் மதுஷங்க என்ற பொடி லேசியின் தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியானைதான் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நேற்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்தார்.அதன்படி பொடி லசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.