உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
92 ஒக்டேன் லங்கா பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 177 ரூபாவாகும்.
95 ஒக்டேன் லங்கா பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் புதிய விலை 207 ரூபாவாகும்.
லங்கா வெள்ளை டீசல் (Lanka White Diesel) லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் லங்கா சுப்பர் டீசல் (Lanka Super Diesel) லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, லங்கா வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 121 ரூபாவாகவும், லங்கா பிரிமியம் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.