இது நியாயமான செயல்பாடா ?
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யோசனைக்கு அமைய, பிரபல பாடகி யோஹானி டி சில்வா உலகளாவிய இசை அரங்கில் அவர் ஆற்றிய சாதனைகளுக்காக கொழும்பில் காணி ஒன்றை பரிசாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் (Robert Gunawardena Mawatha in Battaramulla) அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 9 பேர்ச் காணி யோஹானிக்கு அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற 1996 கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களும் இதேபோன்ற முன்மொழிவின் மூலம் அரசாங்கத்திடமிருந்து காணிகளைப் பெற்றனர்.
முன்மொழியப்பட்ட காணி தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது.