பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். வைத்திய இடமாற்று சபையின் அனுமதியின்றி விசேட வைத்தியர்களின் நியமன பட்டியல் தயார்த்தல் தர நிலை வைத்தியர்களை இணைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக்கொண்டு நேற்றைய தினம் 5 மாவட்டங்களில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இன்று காலை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தந்த நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.