மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அரசாங்கம் அதிகரிக்கலாம்.
எரிபொருள் விலை உயர்வால் மின் உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசின் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நீர்க் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறைந்த நீரைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சுமை ஏற்படாத வகையில், அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.