நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக எண்ணெய் இறக்குமதி செய்வது நாளுக்கு நாள் பெரும் பிரச்சினையாக மாறிவருகிறது.
மேலும், பல எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு கடனை செலுத்தாததால், இலங்கை எண்ணெய் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கிறது.
ஈரானிடம் இருந்து எண்ணெய் பெறுவதற்கு இலங்கை 251 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 50,000 மில்லியன்) செலுத்த வேண்டும்.
நான்கு ஆண்டுகளாகியும் கடனை திருப்பி செலுத்தவில்லை.
தேயிலை அமைச்சரின் பிரேரணை
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஈரானுக்கு தேயிலை கொடுத்து கடனை அடைக்கும் வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இதன்படி, 2022 ஜனவரி முதல் மாதத்தில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ. 1000 மில்லியன்) பெறுமதியான தேயிலையை ஏற்றுமதி செய்ய அமைச்சர் பத்திரன எதிர்பார்க்கிறார்.