நேற்று (23) நள்ளிரவு முதல் நிலைய பொறுப்பதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கப்படாததால், ரயில் பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது எங்கள் கேமராவில் பதிவாகியுள்ளது.
நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும் கண்டி ரயில் சேவை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.