சீனாவின் வெளிவிவகார அமைச்சரும் அரச சபை உறுப்பினரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு நாள் பயணத்தின் போது சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு கொண்டாட்டத்தை சீன வெளியுறவு அமைச்சர் தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.