web log free
September 12, 2025

இணையத்தில் போலி வீசா தளங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவும்.

இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில் காணப்படும் போலி தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா நோக்கங்களுக்கான ஒரே அதிகாரபூர்வ இணையத்தளம் eta.gov.lk/slvisa என்பதை மீண்டும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd