தெஹிவளை கடற்கரையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நீர்மூழ்கி வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 58 வயதுடைய இரத்மலானையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்