எனது பதவி நீக்கம் லாட்டரி அடித்தது போன்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்க இலாகாவிலிருந்து தம்மை நீக்கியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"இது அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும். 2000 ஆம் ஆண்டு முதல் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்துள்ளேன். ஏறக்குறைய 10 வருடங்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளேன். கட்சியை பல தேர்தல் வெற்றிகளுக்கு இட்டுச் சென்றுள்ளேன். எனவே, நாங்கள் அவர்கள் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல” என பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
துப்புரவு பணியாளர்களாக நியமிக்க கூட தகுதி இல்லாதவர்களுக்கு அரசில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
"ஜனாதிபதி எந்த பதவியிலிருந்தும் யாரையும் நியமிக்கலாம் அல்லது நீக்கலாம். அது ஒரு பிரச்சனையல்ல. பொதுமக்களின் சார்பாக பேசுவதே எங்களின் முதன்மையான கடமை. மக்களின் உணர்வுகளுக்கு குரல் கொடுத்தேன்" என பிரேமஜயத மேலும் கூறினார்.