ஒரு இனிய ஞாபகம்..!
"நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்" என நான் பிரதமர் ரணிலுடன் வாய்தர்க்கம் செய்த போது, ரணில் "இப்போது வேண்டாம். அதை ஒத்தி வைப்போம்" என கூறிய போது, எனக்கு ஆதரவாக பேசிய முதல் சிங்கள அமைச்சர், சுசில்தான்.
"நாட்டில் ஏனைய பிரதேசங்களில் 25,000 பேருக்குகூட ஒரு பிரதேச சபை இருக்கும் போது, தலா இரண்டரை இலட்சம் ஜனத்தொகை கொண்டதாக அம்பகமுவ, நுவரெலிய பிரதேச சபைகள் 30 வருடங்களாக செயற்படுகின்றன. இது அநீதி. பாரபட்சம். எமக்கு கட்டாயம் புதிய பிரதேச சபைகள் வேண்டும்" என சிங்களத்தில் சத்தம் போட்டு, ஜனாதிபதி மைத்திரியின் பெஜட் வீதி இல்லத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்திலிருந்து, நாற்காலியை உதைத்து விட்டு, வெளியேற நான் எழுந்த போது, எனக்கு ஆதரவாக "மனோ எமதிதுமாகே இல்லீம இதாம சாதாரணய்" (அமைச்சர் மனோவின் கோரிக்கை மிகவும் நியாயமானது) என சொன்ன நண்பர், சுசில் பிரேமஜயந்த.
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பேஸ்புக் பதிவு.