எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பின் முன்னணி 5 ஸ்டார் ஹோட்டல்கள் விறகு அடுப்பிற்கு மாறியது
நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் கொழும்பு Galle Face ஹோட்டல் சமையலுக்கு விறகுகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஹோட்டல் வளாகத்துக்கு அருகிலுள்ள தனியான இடம் ஒன்றை சமையற்காரர்கள் சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயு தட்டுப்பாட்டால் 5 ஸ்டார் ஹோட்டல்கள் உட்பட பல ஹோட்டல்களும் விறகுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இதேவேளை எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக சிறிய பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.