web log free
June 28, 2026

மெழுகுவர்த்திகள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உப தயாரிப்புகளாகும்

நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிய வந்துள்ளது.

மின் வெட்டு காரணமாக மக்கள் அதற்குத் தயாரான நிலையில் மெழு குவர்த்திகளைச் சேகரிப்பதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டில் மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என "இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால்" தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உப உற்பத்தியாகவே மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் காரணமாக மெழுகுவர்த்தி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளத கவும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd